இந்த ஆண்டு குளிர் என்பது மற்ற ஆண்டுகளை விட மிகவும் அதிகமாக உள்ளது. அதிலும் உத்தரபிரதேசம், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் இரவில் மட்டுமல்லாமல் பகல் நேரத்திலும் கடும் குளிர் நிலவுகிறது.
விடிந்த பிறகும் சில மாநிலங்களில் நீண்ட நேரம் பனி மூட்டமாகவே காணப்படுகிறது. இந்த கடும் குளிரை சமாளிக்க பொதுமக்கள் தெருக்களில் நெருப்பை மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். கடும் குளிர் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவா உள்ளது.
பனிமூட்டம் காரணமாக டெல்லி மற்றும் பிற வட மாநிலங்களில் சாலை ,ரயில் மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. ஆக்ராவில் நேற்று குளிர் அதிகமாக இருந்தாலும் தாஜ்மகாலை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
குளிர் காரணமாக அரியானாவில் இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஸ்ரீநகரில் வெப்பநிலை மைனஸ் 6.2 டிகிரி செல்சியசாக குறைந்தது. இதனால் அங்கு புகழ்பெற்ற தால் ஏரியின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் உறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து உள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…