பெட்ரோல் விலை உயர்வு…! இது மத்திய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை…! – ப.சிதம்பரம்

Published by
லீனா

உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது என பெட்ரோல் விலை உயர்வு குறித்து ப.சிதம்பரம் ட்வீட்.

சமீப நாட்களாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நீலகிரி, திருப்பத்தூர், திருவண்ணா மலை, வேலூர், விழுப்புரம், ராமநாதபுரம், திண்டுக்கல், மயிலாடுதுறை, சேலம் ஆகிய 14 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டிவிட்டது.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் இதுதொடர்பாக, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது. தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ100-ஐ தாண்டியது. கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு டாலர் 75 என்று இருக்கும் போது ஏன் இந்த நிலை?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் கச்சா எண்ணை விலை 105 டாலரைத் தாண்டியது, ஆனாலும் பெட்ரோல் விலை ரூ 65 ஐத் தாண்டவில்லை. இன்றைய நிலைக்கு ஒரே காரணம் மத்திய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை. இந்த வரிக் கொள்ளையின் மூலமாக மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை நடுத்தர, ஏழை மக்களிடமிருந்து நாள் தோறும் உறிஞ்சுகிறது. திரு மோடி அரசின் கொடூரத் தன்மையை மக்கள் நாள் தோறும் அனுபவிக்கிறார்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

9 hours ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

10 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

12 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

13 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

13 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

14 hours ago