ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவதின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியும் உயிரிழப்பு..!

ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திராவை சேர்ந்த முப்படை தளபதி பிபின் ராவத்தின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி சாய் தேஜும் உயிரிழந்துள்ளார்.
ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய விமான படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விபத்தில், ஆந்திராவை சேர்ந்த முப்படை தளபதி பிபின் ராவத்தின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி சாய் தேஜும் உயிரிழந்துள்ளார். இவர் 2013-ல் ராணுவத்தில் இணைந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.