ModiTears [Image source : ANI]
டெல்லி: ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருக்கும் பாரத் மண்டபத்துக்கு வருகை தந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 மாநாடு இன்றும், நாளையும் நடக்க உள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்தியா தலைமை தாங்கும் 18வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது.
இன்று காலை 10 மணிக்கு மேல் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்குகிறது. மதியம் 1 மணிக்கு மேல் இடைவெளி விடப்படுகிறது. அதன் பின், அமர்வு தொடங்கும், இந்திய அரசு சார்பில், இன்று G20 தலைவர்களுக்கு விருந்து வழங்கப்பட உள்ளது. மாநாடு முடிந்த பின்பு, பின்னர், இரவு 7 மணிக்கு ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளிக்கிறார்.
தற்பொழுது, டெல்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள ஜி 20 உச்சிமாநாட்டிற்கான பாரத் மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி அடைந்தார். அப்பொழுது, பிரதமருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் என்எஸ்ஏ அஜித் தோவல் ஆகியோரும் உடன் இருந்தனர். இன்னும் சற்று நேரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்க இருக்கிறது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட 20 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் என அனைவரும் அடுத்தடுத்த நேற்று முதல் டெல்லி வருகை தந்துள்ளனர்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…