நியூ பாபூர் – நியூ குர்ஜா வழித்தடத்தில் கிழக்கத்திய சரக்கு ரயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியின் போது, உத்தரப்பிரதேசம் கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
351 கி.மீ நீளமுள்ள நியூ பாபூர் – நியூ குர்ஜா ரயில் போக்குவரத்து வழித்தடம் உத்தரப்பிரதேசத்தில் ரூ.5,750 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த வழித்தடம், கான்பூர்- தில்லி இடையில் உள்ள முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்.குறிப்பாக இந்திய ரயில்வே விரைவு ரயில்களை இயக்க வழிவகுக்கும்.
பிரயாக்ராஜில் அமைக்கப்படும் நவீன சரக்குப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் (ஓசிசி), கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்தின் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்படும். இந்த ஓசிசி, உலகளவில் மிகப்பெரிய அமைப்புகளில் ஒன்று. மிக நவீன வடிவில் இது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் ‘கிரிகா 4’ தரத்தில் ‘சுகம்யா பாரத் திட்டத்தின்’ விதிமுறைகளின் படி உருவாக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…