இதுதான் நட்பு! சட்டையை விட உயிர் முக்கியம்., மின்னல் வேகத்தில் பறந்த ‘அஜ்மல்’ ஆம்புலன்ஸ்!
தனது நண்பன் போன் செய்ததும் அவசரம் புரிந்து சட்டை கூட அணியாமல் மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸை இயக்கி நண்பனின் தம்பி உயிரை காப்பாற்றிய இளைஞர் அஜ்மலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

திருச்சூர் : நட்புக்கு ஒண்ணுன்னா நண்பர்கள் ஓடி வந்துருவாங்க., எனும் சொற்றொடர்களை அடிக்கடி கேட்டிருப்போம். அதற்கு ஏற்ற பல சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் கேரளா மாநிலம் திருச்சூரில் நிகழ்ந்துள்ளது. தன் நண்பனிடம் இருந்து ஒரே ஒரு போன் கால், சட்டை கூட அணியாமல் அடுத்த நிமிடம் வந்து நின்றுள்ளார் ஆம்புலன்ஸ் டிரைவர் அஜ்மல்.
திருச்சூர் மாவட்டம் எங்கண்டியூர் பகுதியை சேர்ந்த 24 வயதான அஜ்மல் எனும் ஆம்புலன்ஸ் டிரைவர், நேற்று இரவு 9 மணி அளவில் தனது பணியை முடித்துக்கொண்டு அலுவலக கட்டடத்தின் கீழே தனது ஆம்புலன்ஸை கழுவி கொண்டு இருந்துள்ளார். தனது சட்டையை மேல் மாடியில் உள்ள அறையில் வைத்துள்ளார்.
அப்போது திடீரென தனது நண்பன் சரத் என்பவரிடம் இருந்து போன் வந்துள்ளது. தனது சகோதரன் வீட்டு மாடியில் இருந்து விழுந்துவிட்டான். அடிபட்டு மூச்சு பேச்சில்லாமல் இருக்கிறான். உடனடியாக வரும்படி அழைப்பு வந்துள்ளது. அந்த அவசரநிலையை உணர்ந்த அஜ்மல், தற்போது 2வது மாடிக்கு சென்று சட்டையை எடுக்க நேரம் ஆகும் என்பதால் உடனைடியாக வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
அருகே சுமார் 1 கிமீ தூரத்தில் தனது நண்பன் சரத் வீட்டை அடைந்த அஜ்மல், 17 வயதான தம்பி நவீனை தூக்கி கொண்டு ஆம்புலன்சில் ஏற்றி 9 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு வெறும் 5 நிமிடத்தில் மின்னல் வேகத்தில் பறந்துள்ளார் அஜ்மல். மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் துரிதமாக சென்றதால் தனது நண்பனின் தம்பி நவீனின் உயிர் காப்பாற்றப்பட்டது.
நண்பன் போன் செய்த உடன் அவசரம் அறிந்து சட்டை கூட அணியாமல் மின்னல் வேகத்தில் சென்று உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர் அஜ்மலின் செயல் பலராலும் பாரட்டப்பட்டு வருகிறது. மேலும், அஜ்மல் சட்டையில்லாமல் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவி அவருக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது.
சிகிச்சைமுடிந்து பேசிய 17 வயது சிறுவன் நவீன், ” தனது வீட்டில் மொட்டை மாடியில் உள்ள பூனை மற்றும் புறாக்களுக்கு தீனி வைக்க சென்றேன் என்றும், அப்போது மயங்கி விழுந்து விட்டேன். அந்த சமயம் என்ன நடந்தது என்றே எனக்கு நினைவில்லை. எனது அம்மா தான், அண்ணன் அஜ்மல் தூக்கி கொண்டு சென்றதாக கூறினார். தற்போது தோள்பட்டை மற்றும் கையில் அடிபட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு தனது பரவாயில்லை எனக் கூறியுள்ளார்.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025