5 முறை பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த 95 வயதான பிரகாஷ் சிங் பாதல் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார் .
பஞ்சாப் மாநில சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த அரசியல் தலைவரும், 5 முறை முதல்வராகவும் பதவி வகித்த பிரகாஷ் சிங் பாதல் வயது மூப்பு காரணமாக உடல்நல குறைவு காரணமாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்ததால் சில நாட்களுக்கு முன்னர் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 95 வயதான மூத்த அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் உயிரிழந்தார்.இவரது மறைவுக்கு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் இறங்கி தெரிவித்து வருகின்றனர். ஒரு தேசிய அரசியல் தலைவரின் இழப்பாக இவரது மறைவு பார்க்கப்படுகிறது. இவரவு மறைவு காரணமாக நாடு முழுவதும் 2 நாள் துக்க அனுசரிக்க படுகிறது என மத்திய உள்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த மூத்த அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் தனது 20 வயதில் அரசியலில் நுழைந்துள்ளார். சிரோன்மணி அகாலி தளம் கட்சி சார்பில் போட்டியிட்டு 10 முறை சட்டமன்றத்திற்கு எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார். பல்வேறு துறைகளின் அமைச்சர் பொறுப்பிலும் இருந்துள்ளார். 1970ஆம் ஆண்டு முதன் முதலாக முதல்வராக பொறுப்பில் இருந்துள்ளர். அடுத்து, 1977 மற்றும் 1997 என 2வது மற்றும் 3வது முறையாக முதல்வராக இருந்துள்ளார். அடுத்து, 2007 முதல் 2017 வரையில் தொடர்ந்து 2 முறை என் 10 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார் பிரகாஷ் சிங் பாதல் . இறுதியாக கடந்த 2022ஆம் ஆண்டு தேர்தலில் கூட 95 வயதில் தேர்தல் களம் கண்டார் பிரகாஷ் சிங் பாதல் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…