4 நாள் பயணமாக இன்று மகாராஷ்டிரா செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்..!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் 4 நாள் பயணமாக இன்று மகாராஷ்டிரா செல்கிறார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் 4 நாள் பயணமாக இன்று மகாராஷ்டிரா செல்கிறார். இதுகுறித்து ஜாதிபதி மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை மகாராஷ்டிராவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதில், இன்று ராய்காட்டில் உள்ள கோட்டையை பார்வையிட்டு, சத்ரபதி சிவாஜிக்கு மரியாதை செலுத்துகிறார். நாளை புனே லோகேகாவ் பகுதியில் உள்ள விமானப்படை தளத்தை பார்வையிடுகிறார். அங்கு அவர் விமானங்களின் சாகசத்தை பார்த்துவிட்டு, வீரர்களுடன் உரையாடுகிறார். மேலும் புதன்கிழமை மும்பையில் நடைபெறும் விழாவில் 22-வது ஏவுகணை கப்பல் படைக்கு கொடி அங்கீகாரம் வழங்குகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025