தெலுங்கானாவில் திருமணம் நடத்தி வைக்க வந்த புரோகிதர் ஒருவர் மணப்பெண்ணின் தாலியில் கோர்க்க கூடிய ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கமணி குண்டுகளை திருடிச் சென்றுள்ளது வீடியோவில் அம்பலமாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள துப்ரான் எனும் பகுதியில் கடந்த 16ம் தேதி ஞான சங்கர் தாஸ் மற்றும் வசந்தா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. மந்திரங்கள் முழங்க புரோகிதர் ஒருவர் வந்து திருமணம் செய்து வைத்துள்ளார். அப்போது மணப்பெண்ணின் தாலியில் கோர்க்க கூடிய தங்கமணி குண்டுகள் அனைத்தும் மஞ்சள் குங்குமம் வைத்துள்ள தட்டில் வைத்து மணமேடையில் பூஜை செய்யப்பட்டுள்ளது. பூஜை நடந்து கொண்டிருக்கும் பொழுது அந்த புரோகிதர் மணப்பெண்ணின் தாலியில் கோர்க்க கூடிய தங்கமணி குண்டுகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துள்ளார்.
இதனை அடுத்து தாலியில் கோர்க்க கூடிய தங்கமணி குண்டுகளை காணவில்லை என திருமண வீட்டார் அதிர்ச்சி அடைந்து, திருமண வீடியோவில் பார்த்த பிறகு புரோகிதர் அந்த தங்கமணி குண்டுகளை தனது பாக்கெட்டில் எடுத்துப் போடுவது தெளிவாக பதிவாகியிருக்கிறது. இதனை அடுத்து ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த தங்கமணி குண்டுகளை திருடிய புரோகிதர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். வீடியோவை போலீசில் ஆதாரமாக குடும்பத்தினர் கொடுத்த நிலையில், போலீசார் தற்போது திருமண மண்டபத்தில் திருடிய புரோகிதரை வலைவீசி தேடி வருகின்றனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…