Indian Hockey Team - PM Modi [File Image]
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்தது. இந்த தொடரில், தோல்வியையே சந்திக்காத இந்தியா அணியும் மலேசியா அணியும் இறுதி போட்டியில் மோதின. இதில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியா அணியை வீழ்த்தி 4வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.
4வது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீரர்களுக்கு கோப்பை வழங்கி 1.10 கோடி ரூபாய் அளவுக்கு பரிசு தொகையையும் அறிவித்தார் .
ஆசிய கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணியை பிரதமர் மோடியும் வாழ்த்தியுள்ளார். அவர் X சமூகவலைத்தளத்தில் பதிவிடுகையில், ஆசிய சாம்பியன்ஷிப்பில் அற்புதமான வெற்றியைப் பெற்ற எங்கள் ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள்.
இது இந்தியாவின் 4வது வெற்றியாகும், இது நமது வீரர்களின் அயராத அர்ப்பணிப்பு, கடுமையான பயிற்சி மற்றும் தளராத உறுதியை வெளிப்படுத்துகிறது. அவர்களின் அசாதாரன செயல்பாடு நாடு முழுவதும் மகத்தான பெருமையை பற்றவைத்துள்ளது. எங்கள் வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். என ஆங்கிலத்தில் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…