துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ‘துடிப்பான குஜராத்’ என்ற பெயரில் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். இதற்கு முன்னதாக அகமதாபாத்தில் உள்ள அறிவியல் நகரில் ரோபோ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள பிரதமர் மோடி, அறிவியல் நகரில் நடைபெறும் குஜராத் குளோபல் உச்சி மாநாடு 2023-ன் 20 ஆண்டு நிறைவை குறிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவவ்ரத் மற்றும் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இதில் தொழில்துறை சங்கங்கள், வர்த்தகத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், இளம் தொழில்முனைவோர், உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இதனையடுத்து, சோட்டா உதேபூர் மாவட்டத்தில் ரூ.5,206 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.
மிஷன் ஸ்கூல்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் திட்டத்தின் கீழ், 4,505 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் திட்டங்களைத் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார். 22 மாவட்டங்களில் உள்ள 7,500 கிராமங்களில் 20 லட்சம் பயனாளிகள் பயன்பெறும் கிராம வைஃபை வசதிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025