திருவனந்தபுரத்தில் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
கேரளா: கேரளாவிற்கு இரண்டு நாள் பயணமாக வருகை புரிந்த பிரதமர் மோடி இன்று ரூ.3,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
வந்தே பாரத் ரயில்:
அதில் முதற்கட்டமாக, கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை இயக்கப்படும் கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ரயில் திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு இடையேயான 586 கிமீ தூரத்தை 8 மணி நேரத்தில் கடக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், காசர்கோடு முதல் ரயில் சேவை ஏப்ரல் 26ம் தேதியும், திருவனந்தபுரத்தில் இருந்து ஏப்ரல் 28ம் தேதி முதல் ரயில் சேவையும் தொடங்கும்.
டிஜிட்டல் அறிவியல் பூங்கா:
இதையடுத்து, திருவனந்தபுரத்தில் டிஜிட்டல் அறிவியல் பூங்காவிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த டிஜிட்டல் அறிவியல் பூங்கா, கல்வியாளர்களுடன் இணைந்து தொழில் மற்றும் வணிக பிரிவுகளால் டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய ஆராய்ச்சி வசதியாக இருக்கும்.
நீர்வழி மெட்ரோ சேவை:
பின்னர், நாட்டில் முதல் முறையாக கொச்சியில் உள்ள 10 தீவுகளை இணைக்கும் பேட்டரியில் இயங்கும் கொச்சி நீர்வழி மெட்ரோ திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
உயர்நீதிமன்றம்-போல்காட்டி-வைபீன் வழித்தடத்திலும், வைட்டிலா-காக்கநாடு வழித்தடத்திலும் ஏசி எலக்ட்ரிக்-ஹைப்ரிட் படகு சேவை, இந்த இடங்களுக்கு இடையிலான பயண நேரத்தை குறைக்கும்.
நகரில் இருந்து காக்கநாடு பகுதிக்கு செல்லும் போது, சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் மக்களுக்கு, வைட்டிலா-காக்கநாடு சேவை பெரிதும் உதவுகிறது.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…