PMModi [file image]
தமிழகத்திற்கு 3 நாள் பயணமாக வந்த பிரதமர் மோடி திருச்சி, ராமேஸ்வரம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகளை முடித்துக்கொண்டு தற்பொழுது தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி பிரதமர் மோடி கோவில்களுக்கு சென்று வருகிறார். அதன்படி, நேற்று திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்த மோடி இன்று தனுஷ்கோடி ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.
முதல் நாளான நேற்று முன் தினம் சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடி, நேரு விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் இரண்டாம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் கோவிலுக்கு பிரதமர் தரிசனம் செய்தார்.
நேற்று முதலில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் தெற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்து அனைத்து சன்னதிகளிலும் பிரதமர் சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து நேற்று மதியம் ராமேஸ்வரம் புறப்பட்ட பிரதமர் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடினார். பின்னர் நேற்றிரவு ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்துக்கு சென்ற பிரதமர், அங்கு தங்கி ஓய்வு எடுத்தார்.
ராமேஸ்வரம் – 22 புனித தீர்த்தங்களில் நீராடும் பிரதமர் மோடி!
மூன்றாம் நாளான இன்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் மலர்கள், துளசி ஆகியவற்றை தூவி பிரதமர் வழிபாடு செய்ததோடு, சிறிது நேரம் தியானம், சூரிய வழிபாடு செய்தார். அதன் பின்னர் கோதண்டராம சுவாமி கோவிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்று வழிபாடு செய்தார்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
இந்நிலையில், நாளை அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், அங்கு சிறப்பு வழிபாட்டு செய்வதற்காக, 22 புனித தீர்த்தங்கள், புனித மண்ணை பெற்றுக்கொண்டு, ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை சென்ற பிரதமர் மோடி தற்போது மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…