PM Modi [Image source : PTI]
கடந்த செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகளை சேர்ந்த பன்னாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இந்தோனீசியா, இத்தாலி உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து பெரும்பாலான தலைவர்கள் இந்தியா வந்திருந்தனர்.
தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளோடு எந்தவித அசம்பாவிதமும் இன்றி ஜி20 உச்சிமாநாட்டை இந்தியா தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்தியது. இந்த மாநாடானது டெல்லியில் புதியதாக கட்டப்பட்டு இருந்த பாரத் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதை அடுத்து டெல்லி பாரத் மண்டபத்தில் வைத்து ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்க உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.
பிரதமர் மோடி பேசுகையில், ஜி20 மாநாட்டின் வெற்றிக்கான பாராட்டுக்கள் உங்கள் அனைவரையும் சேரும். உங்கள் அனுபவங்களை ஆவணப்படுத்த நான் ஒரு கோரிக்கை வைத்துள்ளேன். இது எதிர்கால நிகழ்வுகளுக்கு வழிகாட்டியாக அமையும்.
எல்லோரும் ஜி20 மாநாடு குறித்த அவரவர் அனுபவங்களை உங்கள் மொழியில் எழுதலாம். ஜி20 உச்சிமாநாடு நடத்த எதிர்கொண்ட சவால்களை எப்படி சமாளித்தீர்கள் என்பது பற்றி அதில் குறிப்பிடலாம். இந்த ஆவணங்கள் இணையதள சேமிப்பு பக்கத்தில் சேமிக்கப்படும் என கூறினார்.
இந்த பாராட்டு விழாவில், அரசு உயர் அதிகாரிகள் மட்டுமின்றி, துப்புரவு பணியாளர்கள், ஓட்டுநர்கள், மற்ற பணியாளர்கள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களை சேர்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த பாராட்டு விழா முடிந்த பிறகு அனைவருக்கும் இரவு விருந்து அளிக்கப்பட்டது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…