மனதின் குரல் நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் ‘மான் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றுவது உண்டு. இந்த நிகழ்ச்சி தமிழில் ‘மனதின் குரல்’ என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தூத்துக்குடி மக்களை புகழ்ந்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், நாம் இயற்கையை பாதுகாக்கும் போது பதிலுக்கு. இயற்கையும் நம்மை பாதுகாக்கும். இதனை நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட வாழ்க்கையில் உணர்ந்திருப்போம். அதற்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் நல்ல உதாரணத்தை அளித்துள்ளார்கள்.
கடலோரப்பகுதியில், சில பகுதிகள் கடல் அரிப்புக் காரணமாக காலப்போக்கில் அழிந்து போவதை நாம் பார்க்கிறோம். இந்த ஆபத்தை தடுக்கும் வண்ணம் சிறிய தீவுகள் தூத்துக்குடியில் உள்ளனர். தூத்துக்குடி மக்களும், வல்லுனர்களும் இந்த தீவுகளில் பனை மரங்களை அதிகளவில் நட்டு வருகிறார்கள். இந்த மரங்கள் புயல் கடல் அரிப்பு போன்ற இயற்கை பேரிடர்களின் போது நிலைத்து நின்று நிலத்தை பாதுகாப்பதோடு, பேரழிவுகளையும் தடுக்கிறது என குறிப்பிட்டு பேசியுள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…