நாட்டு மக்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி.!

Default Image

இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை கடந்த 24ம் தேதி காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கொரோனா தொடர்பான தகவல்களை காணொளி காட்சி மூலம் மோடி உரையாற்றி வருகிறார். அதேபோல் நேற்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காணொளி காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். 

இதையடுத்து இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தியை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள் என்றும் நாம் எடுக்கும் நடவடிக்கைகைகள் உலக நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவிற்கு எதிராக யுத்தம் நடத்துவதற்கு நன்றி என மோடி தெரிவித்தார். வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். மேலும் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள் என்றும் இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 09052025
India Pak War tensions
India Pakistan Tensions
schools shut
Jammu and Kashmir