தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் மோடி..!

modi

பிரதமர் மோடி அவர்கள் இன்று பெங்களூருவை தளமாகக் கொண்டு செயல்படும், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு  நேரில் சென்று  பார்வையிட்டார். அங்கு உற்பத்தி நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.

அதன்பின் பிரதமர் மோடி விமானப்படை வீரர்களுக்கான சீருடையை அணிந்துகொண்டு தேஜஸ் விமானத்தில் பயணம் செய்தார். இந்த பயணம் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘தேஜஸ் விமானத்தில் ஒரு பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு செழுமைப்படுத்தியது, நமது நாட்டின் பூர்வீக திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது, மேலும் நமது தேசிய திறனைப் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்தது.’ என பதிவிட்டிருந்தார்.

சுரங்க விபத்து: 14வது நாளாக தொடரும் மீட்புப் பணி! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், துபாய் விமான கண்காட்சியில் LCA தேஜாஸ் பங்கேற்றது. இந்த நிகழ்ச்சியில், இந்த போர் விமானமானது வலிமையான போர் விமானமாக அதன் திறனை நிரூபிக்கும் சில துணிச்சலான நிகழ்வுகளை  நிகழ்த்தி காட்டியது. LCA ஆனது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) ஆல் கட்டப்பட்டது மற்றும் இது முதன்மையாக இந்திய விமானப்படைக்காக வடிவமைக்கப்பட்டது.

தேஜாஸ் விமானத்தில் அதிகபட்சமாக 4000 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது. இது ஒரு பைலட் ஒற்றை இன்ஜின் விமானமாகும். இந்த விமானம் அதிகபட்சமாக 13,300 கிலோ எடை கொண்டது ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

allu arjun - OneElection
live tamil news
EVKS Elangovan
BJP Leader LK Advani
evks elangovan
Pushpa 2 actor Allu arjun
gold price
Australia vs India - 3rd Test