Prime Minister Modi comments on the movie 'The Kerala Story'! [Image source : ANI]
தீவிரவாதத்தின் கொடூர முகத்தையும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் காட்டுகிறது என கர்நாடகா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு.
இந்தி திரைப்படமான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. படத்தில் கேரள பெண்கள் ISIS தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக காட்டப்பட்டிருப்பதால் இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், படத்தை வெளியீட தடை விதிக்க நீதிமன்றம் நேற்று மறுத்ததை அடுத்து இன்று படம் வெளியாகவுள்ளது. இருப்பினும், படத்தை தடை செய்ய கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் குறித்து பிரதமர் மோடி தனது கருத்தை தெரிவித்துள்ளார். கர்நாடகா தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாதிகளின் திட்டத்தை வெளிப்படுத்துவதுடன், தீவிரவாதத்தின் கொடூர முகத்தையும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் காட்டுகிறது. இது பயங்கரவாதத்தின் அசிங்கமான உண்மையைக் காட்டுகிறது.
தீவிரவாத சதித்திட்டத்தை மையமாக வைத்து ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது பரப்பாக பிரதமர் பேசியுள்ளார். இதன்பின் பேசிய பிரதமர், தீவிரவாதத்திற்கு எதிரான படத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது. தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போதெல்லாம் காங்கிரசுக்கு வயிறு வலிக்கிறது. காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கிக்காக தீவிரவாதத்திற்கு அடிபணிந்துள்ளதை கண்டு வியப்படைகிறேன் என்றார்.
அப்படிப்பட்ட கட்சியால் கர்நாடகத்தை காப்பாற்ற முடியுமா? பயங்கரவாத சூழலில், இங்குள்ள தொழில், ஐடி தொழில், விவசாயம் மற்றும் புகழ்பெற்ற கலாச்சாரம் அழிந்துவிடும். கர்நாடகாவை நாட்டின் முதல் மாநிலமாக மாற்ற பாதுகாப்பு அமைப்பு, சட்டம் ஒழுங்கு ஆகியவை மிக முக்கியமான தேவை. பயங்கரவாதத்தில் இருந்து கர்நாடகம் விடுபடுவதும் முக்கியம். பயங்கரவாதத்திற்கு எதிராக பாஜக எப்போதும் கடுமையாக செயல்பட்டு வருகிறது.
எனவே, தீவிரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து, தீவிரவாத போக்குடன் நின்று போராடி வருகிறது. வாக்கு வங்கிக்காக பயங்கரவாதத்தை காங்கிரஸ் பாதுகாத்துள்ளது என்றும் மற்றும் பயங்கரவாதிகளின் வடிவமைப்பை அம்பலப்படுத்துகிறது எனவும் கர்நாடகா மாநிலம் பல்லாரியில் நடந்த பரப்புரையில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…