பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி நிறுவனர்களுடன் இன்று ஆலோசனை.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் தனது தீவிர ஆட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், இந்தியாவில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், தற்போது சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று பிரபல மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் உடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிப்பது, மூலப் பொருட்களின் தேவை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்று கூறப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…