இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் சரியான வேலை இல்லாததால் பலர் உணவின்றி தவித்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகங்களுடன் சேர்ந்து உணவின்றி தவிப்பவர்களுக்கு சமுக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், வாரணாசி பொதுமக்களும் , அங்குள்ள சமுக ஆர்வலர்களும், மாவட்ட நிர்வாகங்களுக்கு உதவி சொந்த முயற்சியால் வருகின்றனர். இதன் மூலம் அங்குள்ள ஒவ்வொருவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 20 லட்சம் உணவு பொட்டலங்கள் மற்றும் 2 லட்சம் ரேஷன் பொருட்களை 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்டவையும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இவர்களை மாவட்ட நிர்வாகம் கொரோனா போராளிகளாக கவுரவித்தது.
இந்நிலையில், வாரணாசியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அங்குள்ள சமுக ஆர்வலர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலமாக கலந்துரையாற்ற உள்ளார்.
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…