டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி பேரிடம் இருந்து பெறப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய மனுவை குடியரசுத் தலைவரிடம் ராகுல் காந்தி சமர்பிக்கவுள்ளார்.இதனிடையே டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி மற்றும் கட்சியினர் பேரணியாக சென்றனர்.ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.போலீஸ் தடையை மீறி குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி சென்ற பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…
கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…