புதுச்சேரி 100% தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாறும் – கவர்னர் தமிழிசை!

Published by
Rebekal

புதுச்சேரி 100% தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாறும் என கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கூறியுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாநிலங்களிலும் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபோல புதுச்சேரியிலும் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும், கொரோனா தொற்றை ஒழிக்கும் விதமாகவும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக புதுச்சேரியில் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவண்டார்கோயிலிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி திருவிழா இன்று நடைபெற்றுள்ளது.

இந்த திருவிழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், திருபுவனை எம்எல்ஏ அங்காளன், சுகாதாரத்துறை செயலாளர் அருண், மாவட்ட கலெக்டர், துணை கலெக்டர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தடுப்பூசி திருவிழாவை தொடங்கி வைத்த பின்பதாக செய்தியாளரை சந்தித்து பேசிய கவர்னர் தமிழிசை, புதுச்சேரியில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்திருப்பதாகவும், தடுப்பூசியை மக்களுக்கு கொண்டு செல்வதில் சுகாதாரத்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருவதாகவும்  தெரிவித்துள்ளார்.

மேலும், தடுப்பூசி திருவிழாவில் நேற்று மட்டும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு உள்ளதாகவும், இதே நிலை நீடித்தால் 100% தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக புதுச்சேரி மாறிவிடும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே தீர்வு எனவும், இந்தியாவில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக புதுச்சேரி விளங்குகிறது என்ற பெருமையை நாம் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், அனைவரும் உற்சாகம் குறையாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதன் பின்பதாக கவர்னர் தமிழிசை திருபுவனை சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தை திறந்து வைத்ததுடன், அங்கு உள்ள வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

Recent Posts

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

1 hour ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

1 hour ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

2 hours ago

திருமணம் முடிந்த 10 நாட்களில் கார் விபத்தில் பறிபோன கால் பந்து வீரர் உயிர்.!

சென்னை :  லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…

2 hours ago

‘குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை’ – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!

சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…

4 hours ago

செஸ் உலகக்கோப்பை தொடரில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிறுமி!

படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…

4 hours ago