ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் 2,500 சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் ஓன்று வேகமாக வந்த இராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதலை நடத்தினார்.
இந்தத்தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைத்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து விசாரணையில், இதன் பின்னணியில் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் இருந்ததும் தெரியவந்தது.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது . புல்வாமா தாக்குதல் நடந்து ஒரு வருடத்திற்கு மேலாக முடிந்த நிலையில், இதுவரை என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை குற்றச்சாற்று எழுந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காஷ்மீர் நீதிமன்றத்தில் 13,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்தது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தலைவர் மசூத் அசார், அவரது சகோதரர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், புல்வாமா தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவுவதில் ஒரு இளம் பெண் உள்ளதாக என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெடிகுண்டு தயாரித்த முக்கிய குற்றவாளி முகமது உமர் பாரூக்குடன் இன்ஷா ஜான் என்ற 23 வயது பெண் தொடர்பில் இருந்துள்ளார்.
அவர்கள் தொலைபேசி மற்றும் சமூக ஊடக தளங்கள் வழியாக தொடர்பில் இருந்துள்ளனர். அவர்களுக்கு இடையே பரிமாறிக்கொண்ட பல செய்திகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். அந்த செய்திகளை வைத்து பார்க்கும்போது அவர்களின் நெருக்கத்தை குறிக்கின்றன.
இதுகுறித்து நாங்கள் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளோம் என குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த மறுநாள் ஒரு மூத்த என்ஐஏ அதிகாரி தெரிவித்தார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…