Quarterly Exam: புதுச்சேரியில் 21 முதல் காலாண்டு தேர்வு.. செப்.30 முதல் அக்.4 வரை விடுமுறை!

Puducherry Quarterly Exam

புதுச்சேரியில் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடைபெறும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகியுள்ள நிலையில், 1 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு ஒரே நேரத்தில் காலாண்டு தேர்வு நடைபெறுகிறது.

மேலும், புதுச்சேரியில் செப்டம்பர் 30ம் தேதி முதல் அக்.4ம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டு, அக்.5ல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக்தில் காலாண்டுத் தேர்வுக்கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்,15 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பிளஸ் 1 வகுப்புக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், பிளஸ் 2 வகுப்புக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும். இதுபோன்று, 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு செப்.19-ல் தொடங்கி 27-ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடத்தப்பட உள்ளது. செப்.28 முதல் அக்.2-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்