M.K.Stalin Greetings: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!

சிங்கப்பூரின் தற்போதைய அதிபராக உள்ள ஹலிமாவின் பதவிக்காலம் வரும் 13ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இதனால் கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 22ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இலங்கையை சேர்ந்த தமிழ் வம்சாவளியாளரான தர்மன் சண்முகரத்னம் , இங் கொக் சொங் , டான் கின் லியான் ஆகியோர் இறுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த முறை முதன் முதலாக வெளிநாடு வாழ் சிங்கப்பூர்காரர்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு இருந்தது. அதிபர் தேர்தல் நேற்று (செப்டம்பர் 1) நடைபெற்று நேற்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. அதில் தமிழ் வம்சாவளியாளரான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளை பெற்று மற்ற இரு வேட்பாளர்களை காட்டிலும் அபார வெற்றி பெற்றார்.
தற்போது சிங்கப்பூரின் 9வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றார். இந்நிலையில், சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் 9வது அதிபராக வெற்றி பெற்றுள்ள தமிழர் தர்மன் சண்முகரத்தினத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்ட வாழ்த்துச்செய்தியில், “சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.தர்மன்.எஸ் அவர்களுக்கு வாழ்த்துகள். உங்களின் தமிழ் பாரம்பரியம் மற்றும் ஈர்க்கக்கூடிய தகுதிகள் எங்களை பெருமைப்படுத்துகிறது மற்றும் சிங்கப்பூர் மக்களின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. வெற்றிகரமான காலத்தை வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025