Vijay : நிஜமான ஃபேன் பாயாக மாறிய விஜய்! எந்த படத்தை பார்த்து ரசித்துள்ளார் தெரியுமா?

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவிற்கு அவர் சென்றிருந்தார். அங்கு அதிநவீன முறையில் அவரது முகம் 3D ஸ்கேன் செய்யப்படும் புகைப்படத்தையும் கூட இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு இருந்தார்.
இந்த நிலையில், அதனை தொடர்ந்து நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோர் லாஸ் ஏஞ்சல்ஸ் திரையரங்கில் ‘தி ஈகுவலைசர் 3’ திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தனர். படத்தை பார்த்தவுடன் நடிகர் விஜய் தன்னுடைய படங்களை திரையரங்கில் ரசிகர்கள் எந்த அளவிற்கு பார்த்து கொண்டாடி கைகளை தூக்கிக்கொண்டு போஸ் கொடுப்பார்களோ அதே போல விஜய்யும் நிஜ ஃபேன் பாயாக மாறி போஸ் கொடுத்தார்.

அதற்கான புகைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு விஜய் ஃபேன் பாயாக மாறிய தருணம் என கூறியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அடடா தளபதி விஜய் “உண்மையாகவே நிஜ ஃபேன் பாயாக மாறிவிட்டாரே” என கூறி வருகிறார்கள்.
மேலும், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படம் வெளியான பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 68 படத்தில் விஜய் நடிப்பார் என கூறப்படுகிறது.
தளபதி 68 திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சென்னை 28, மங்காத்தா, மாநாடு போன்ற தரமான படங்களை இயக்கியுள்ள வெங்கட் பிரபு விஜய்யுடன் கூட்டணி அமைந்துள்ளதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.