Congress MP Rahul gandhi [Image source : PTI]
மும்பையில் இந்தியா கூட்டணியின் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றதை அடுத்து, எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முதலில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் ஒவ்வொருவராக பேட்டியளித்தனர்.
இவர்களை தொடர்ந்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பாஜகவை இந்தியா கூட்டணி முழுமையாக தோற்கடிக்கும் என நம்புகிறோம். கருத்து வேறுபாடுகளை களைவதில் சிறந்த புரிதலோடு தலைவர்கள் செயல்படுகின்றனர். தொகுதி பங்கீடு குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. எனவே, சுமூகமான முறையில் தொகுதிப் பங்கீட்டை நடத்தி முடிப்போம்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மோடியை இந்தியா கூட்டணி தோற்கடிப்பது நிச்சயம். தெளிவான திட்டத்தை முன்வைக்கவுள்ளோம் என்றார். மேலும் கூறுகையில், லடாக் சென்றிருந்தபோது அங்குள்ள மக்களிடம் உரையாடினேன். இந்திய பகுதிகளை சீன ஆக்கிரமித்து இருப்பதை அந்த பகுதி மக்கள் என்னிடம் தெரிவித்தனர். எல்லை விவகாரத்தில் பிரதமர் பச்சை பொய் கூறி வருகிறார்.
இந்திய மக்களுக்கு மட்டுமல்ல, லடாக் மக்களுக்கும் மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜக வெற்றி பெறுவது சாத்தியமல்ல. இந்தியாவின் நம்பகத்தன்மையை காப்பாற்ற பிரதமர் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். ஏழை மக்களிடம் இருந்து பணத்தை பறித்து குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்கு வழங்குவதே மோடி அரசின் இலக்கு.
ஏழை மக்களுக்காக பிரதமர் மோடி ஒருபோதும் உழைத்ததில்லை. ஏழைகள், விவசாயிகள் என அனைவரும் இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும். மக்களின் ஒற்றுமையே இந்தியா கூட்டணியின் பலம். தலைவர்களிடையே நல்ல புரிந்துணர்வையும், நட்புணர்வையும் இந்த கூட்டங்கள் ஏற்படுத்தியுள்ளன. கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் செயல்படுகின்றன என தெரிவித்தார்.
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…