நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அந்த கட்சி தனியாக இந்தியாவில் மொத்தம் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடைந்தது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான அமேதியில் தோல்வியடைந்தார். இருந்தாலும் கேரளா வயநாட்டில் முதன்முதலாக போட்டியிட்டு வெற்றி அடைந்தார்.
இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று செய்தி அதிகம் உலாவி வந்தது.மேலும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் முன்வந்ததாகவும் ,அதை காங்கிரஸ் கமிட்டி நிராகரித்ததாகவும் தகவல் வெளியானது.
இந்தநிலையில் இருப்பினும், தனது ராஜினாமா முடிவில், ராகுல் காந்தி உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் .அப்போது அவர் கூறுகையில்,ராகுல் காந்தி, கட்சியின் தலைவராக தொடர்வதற்கு,1 விழுக்காடு கூட வாய்ப்பு இல்லை.மேலும் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்கியது இல்லை.காங்கிரஸ் கட்சியின் அடுத்த யார் என்று வரும் செய்திகள் அனைத்தும் வதந்திதான் என்றும் பேசினார்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…