மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடந்து வருகின்றன. தலைநகர் டெல்லியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.
பல இடங்களில் போராட்டங்கள் கலவரமாக மாறினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தும், போலீசார் மீது கற்களை வீசியும் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை வீசியும் போராட்டத்தை கலைத்தனர்.
இந்நிலையில் நேற்று அசாமில் அமைதியான முறையில் சில இடங்களில் ஊர்வலங்கள் நடைபெற்றன. மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பில் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
இதேபோன்று இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக லோக் அதிகார் மஞ்ச், பாஜக , ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் இன்று பேரணியாக சென்றன.
பேரணியாக சென்றவர்கள் தங்கள் கைகளில் மூவர்ண கொடி மற்றும் தங்களுடைய அமைப்புகளின் கொடிகளை ஏந்தியும் , ஆதரவு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கொண்டும் , கோஷங்கள் எழுப்பியபடியும் சென்றனர்.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…