மத்திய அரசுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி பேரணி.!

மத்திய அரசுக்கு எதிராக ராம்லீலா மைதானத்தில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) பிரம்மாண்ட பேரணியை நடத்தவுள்ளது
டெல்லியில் இன்று AAP (ஏஏபி) பிரமாண்ட பேரணி நடத்தவுள்ளனர். மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு எதிராக பேரணி நடத்த உள்ளனர்.
பேரணி முடிந்ததும் ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் கண்டன நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சியின் பிற முக்கிய தலைவர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்கின்றனர்.
இதற்கிடையில், மத்திய அரசின் முடிவுக்கு எதிராக பல மாநில முதல்வர்களை சந்தித்து ஆதரவை திரட்டி வருகிறார் கெஜ்ரிவால்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025