ராமர் கோவில் பூமி பூஜை குறித்து சீதாராம் யெச்சூரி விமர்சனம்.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உட்பட, பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சிபிஎம் கட்சிப் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி அவர்கள் இதுகுறித்து கூறுகையில், ஆளுநர், முதல்வர் முன்னிலையில் ராமர் கோவில் கட்டுமானத்தை அரசு எடுத்து நடத்துவது அரசியல் அமைப்பை மீறும் செயல் ஆகும். உச்ச நீதிமன்றம் ராமர் கோயில் கட்டும் பொறுப்பை அறக்கட்டளையிடம் விட வேண்டும் என்று கூறியிருந்தது.
மேலும், பாபர் மசூதி இடிப்பு சட்ட விரோதம் அதைச் செய்தவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால், யாருக்கும் தண்டனை வழங்கப்படும் முன்பே, ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கி விட்டது என்றும், இந்த பூமிபூஜை நிகழ்வு மக்களின் மத உணர்வுகளை நேரடியாகச் சுரண்டும் மலிவான அரசியல் நோக்கம் கொண்டது என்றும், அரசியல் சாசனத்தின் எழுத்தையும் உணர்வையும் வெளிப்படையாக மீறும் செயலாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…
கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…