17 வது மாநிலங்கவை தேர்தலில் கேரளாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண் உறுப்பினர் ரம்யா ஹரிதாஸ் இவர் மார்க்கிஸ்ட் கமினிஸ்ட் கட்சியின் 36 ஆண்டு கால கோட்டையாக கருதப்பட்ட ஆலத்தூர் தொகுதியை காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தனது 32 வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக அடியெடுத்து வைத்த இவருடைய பின்னணி குறித்து நோக்கினால் கோழிக்கூட்டை சேர்ந்தவர் கடந்த 2011 ஆண்டு முதல் தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நடத்திய திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியின் மூலம் சிறப்பு கவனம் பெற்றார்.இந்நிலையில் கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நடவுப் பணியானது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
எம்பி ரம்யா ஹரிதாஸ் தனது நிலத்தை தானே உழுது ,தன்னுடன் நடவு செய்பவர்களுடன் இணைந்து நடவு செய்கிறார் .இது குறித்து அவரிடம் கேட்ட பொழுது புன்னகை ததும்ப கூறுகிறார். அடிப்படையில் நான் ஒரு விவசாயி அதற்கு பிறகு தான் இந்த எம்பி எல்லாம் என்றவாறு பதில் அளித்தார்.
இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இடையே தற்போது இவருக்கு பாராட்டி வருகின்றனர். எம்பி ஆனதும் பறக்கும் கார்களில் இறங்குவதை தான் நாங்கள் பார்த்து இருக்கிறோம் ஆனால் இவர் சற்று வித்தியாசமாக உள்ளார்.ஆனால் இங்குள்ள எம்பிகள் எல்லாம் என்று பெருமூச்சு விடுகின்றனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…