சர்ச்சை கருத்தை கூறிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது கருத்தை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் – ஜூன் வரையிலான காலாண்டில் 5% ஆக குறைந்தது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்தது.இது குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.அப்பொழுது அவர் கூறுகையில், அக்டோபர் 2-ஆம் தேதி வெளியான 3 திரைப்படங்களுக்கும் சேர்த்து அன்றைய தினம் 120 கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாக திரைப்பட வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர் .இது நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருப்பதற்கு சான்று என்றும் தெரிவித்தார் ரவிசங்கர் பிரசாத்.இவரது இந்த கருத்துக்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் இன்று இது குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது கருத்தை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2-ஆம் தேதி சயிரா நரசிம்ம ரெட்டி,ஜோக்கர், வார் ஆகிய 3 திரைப்படங்கள் வெளியாகியது .இந்த திரைப்படங்கள் வசூலில் பெரும் சாதனைகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…