ரீல்ஸ் மோகத்தால் நடந்த சோகம்… ரயிலில் அடிபட்டு 16 வயது மாணவன் பரிதாப பலி.!!

Instagram reel on rail tracks

ஹைதராபாத்தில் ரயில் தண்டவாளத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்களுக்காக வீடியோ பதிவு செய்யும் போது, ஓடும் ரயிலில் அடிபட்டு 16 வயது மாணவன் ஒருவர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் சனாதநகரில் நடந்துள்ளது.

ஆதாரங்களின்படி, ரயிலில் அடிபட்டு இறந்தவர் முகமது சர்ஃபராஸ், என அடையாளம் காணப்பட்டார். இவர் ரயில் தண்டவாளத்தில் இருந்து சற்று தள்ளி நின்று கொண்டிருந்த நிலையில், அவருடன் இருந்த இரண்டு நண்பர்களும் வீடியோக்களை பதிவு செய்ய தொடங்கினர்.

அப்போது முகமது ரீல்ஸ் எடுப்பதற்காக தண்டவாளத்திற்கு மிக அருகில் நின்றுகொண்டிருந்துள்ளர். தனக்கும் ரயிலுக்கும் இடையே உள்ள தூரத்தை தீர்மானிக்க தவறி, ரயிலில் லஅடிபட்டார். இதில் பலத்த காயம் அடைந்த சர்பராஸ் சம்பவ இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் புதர் மற்றும் கற்களில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு இருந்து செல்போனை மீட்ட ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 2021 இல் நடந்த இதேபோன்ற செல்ஃபி மோக சம்பவத்தில், தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இளம்பெண்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்