ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் அறிவித்தார்.
கொரோனா வைரசால் இழந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து 5 கட்டமாக பொருளாதார திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, மும்பையில் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது , ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என அறிவித்தார். இந்த வட்டி குறைப்பால் வீடு மற்றும் வாகன கடன் மீதான வட்டி குறைய வாய்ப்பு உள்ளது. அத்துடன் வங்கிகள் தங்கள் பணத்தை ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் போது அளிக்கப்படும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…