சுமார் 700 கிராம் எடை கொண்ட தங்க பர்கரை 300 வினாடிகளுக்குள் சாப்பிட்டால் ரூ.1000 பரிசு
உணவுகளில் தங்க இழைகள் கலந்த உணவு சமீப காலமாக டிரெண்டாகி வருகிறது. இனிப்புகளில் தங்க இழைகள் கலந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், லூதியானாவைச் சேர்ந்த தெருவோர வியாபாரி ஒருவர் ரூ.1000க்கு தங்கம் தெளிக்கப்பட்ட சைவ பர்கரை விற்பனை செய்கிறார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தெருவோரமாக “பாபாஜி பர்கர் வாலே” என்ற பெயரில் ஒரு கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் சமீபத்தில் சுமார் 700 கிராம் எடை கொண்ட தங்க பர்கர் விற்பனை செய்து வருகிறார். இந்த கடையில் ஒரு ஆஃபர் ஓன்று உள்ளது. அது என்னவென்றால் இந்த வெஜ் கோல்டு பர்கரை யார் ஒருவர் 5 நிமிடங்களுக்குள் சாப்பிட்டாலும் அந்த பர்கருக்கு காசு கொடுக்க வேண்டாம்.
அந்த நபருக்கு ரூ.1000 பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வெஜ் கோல்டு பர்கரில் காய்கறிகள், உலர்ந்த பழங்கள் மற்றும் சாஸ்கள் போன்ற அடுக்குகளைப் பயன்படுத்தி பர்கர் தயாரிக்கப்படுகிறது.
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…