ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் கேந்திரவித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவரான பிஸ்வந்த் பத்ரா என்பவர் ரஷ்யா நாட்டின் சோச்சி நகரில் நடைபெற்ற கல்வி சார்ந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நிதி ஆயோக் சார்பில் தேர்வு செய்யப்பட்டார்.மேலும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து 25 மாணவர்களை இந்த நிதி ஆயோக் அமைப்பு இதற்காகத் தேர்வு செய்திருந்தது. இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 6ம் தேதி வரை நடைபெற்ற இந்த கண்காட்சியில் கலந்துகொண்டு மாணவர் பிஸ்வந்த் பத்ரா தனது கண்டுபிடிப்பை காட்சிப்படுத்தினார்.
அதில் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்கும் மற்றும் தண்ணீர் வழங்கும் `ஸ்மார்ட் வாட்டர் டிஸ்பென்சர்’ ஒன்றை அவர் வடிவமைத்திருந்தார். இந்தக் கண்காட்சியை நேரில் பார்வையிட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மாணவர் பிஸ்வந்திடம், அவரது கண்டுபிடிப்பு குறித்து விளக்க கேட்டிருக்கிறார், மாணவனும் விளக்கி கூறியிருக்கிறான். இந்தத் துறையில் மாணவருக்கு இருக்கும் ஆற்றலும் அறிவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை வியப்புக்குள்ளாக்கியதாக அவரது மொழிபெயர்ப்பாளர் தெரிவித்தார்.
மேலும் அவர், “உங்களைப் போன்ற இன்னும் நிறைய மாணவர்கள் இங்குவந்து, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும். அது மிகவும் பெருமையளிக்கக் கூடியது” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியதாக அவரது மொழிபெயர்ப்பாளர் தெரிவித்தார்.இந்நிலையில், ரஷ்ய அதிபரிடம் பாராட்டு பெற்ற இந்த சிறுவனை ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…