இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய பிரதமர் புடின் ; பிரதமர் மோடி வரவேற்பு!

ரஷ்ய பிரதமர் புடின் டெல்லியிலுள்ள ஹைதராபாத் மாளிகைக்கு வந்தடைந்துள்ளார்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக உச்சி மாநாடு நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கான உச்சி மாநாடு டெல்லியில் தற்பொழுது நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய பிரதமர் புடின் அவர்கள் இந்தியா வருகை தந்துள்ளார்.
தற்போது டெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகைக்கு வந்துள்ள ரஷ்ய பிரதமரை, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரவேற்றுள்ளார். இருவரும் ஹைதராபாத் மாளிகையில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனையின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் எனவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025