காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் தற்போது அதிகரித்து வரும்நிலையில் அதனை தடுக்கும் விதமாக பாதுகாப்பு படை வீரர்களும், காவல்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தீவிரவாதிகளை கண்காணித்து அவர்களை கண்டால் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது போன்ற தாக்குதலில் சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டும் வருகின்றனர். இந்த சமயத்தில் இன்று காலை பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் என்ற இடத்தில் தீவிரவாதிகள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்துள்ளனர். அதனை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த ஆயுதங்களில் 3 ஏ.கே. ரக துப்பாக்கிகள், 12 ஏ.கே. மேகசின்ஸ், 358 துப்பாக்கி குண்டுகள், 2 கை துப்பாக்கிகள், கை துப்பாக்கிகளின் மேகசின்ஸ் மற்றும் 6 கையெறி குண்டுகள் ஆகியவை பாதுகாப்பு படை வீரர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…