போதை பொருள் வழக்கு : ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் …!

போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சொகுசு கப்பல் போதை விருந்து தொடர்பாக நடிகர் ஷாருக்கானின் மகன் உள்ளிட்ட சிலரை அக்டோபர் 3 ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 8 ஆம் தேதி முதல் ஆர்தர் ரோடு சிறையில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என இரண்டு முறை ஆர்யன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இரண்டு முறையும் இவரது ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதன்பின் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மூன்றாவது முறையாக மும்பை ஐகோர்ட்டில் இவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவிற்கு தற்போலித்து மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் ஆர்யன் கானின் ஜாமீன் நிபந்தனைகள் குறித்து மும்பை உயர்நீதிமன்றம் நாளை அறிவிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025