2 year old girl falls into borewell [file image]
குஜராத்தில் இரண்டு வயது சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள விவசாய வயலில் இரண்டு வயது சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளது. ஜாம்நகர் நகரிலிருந்து 40 கிமீ தொலைவில் தமச்சான் கிராமத்தில் உள்ள பண்ணையில் கூலி வேலை செய்யும் பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு வயது சிறுமி விவசாய வயலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது.
அப்பொழுது, விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, திடீரென அங்கிருந்த 200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததாக ஜாம்நகர் தாலுகா வளர்ச்சி அதிகாரி என்.ஏ.சர்வையா கூறியுள்ளார். இந்த சம்பவம் காலை 9 மணியளவில் நடந்துள்ளது.
இதுகுறித்து மேலும் கூறிய சர்வையா, நாங்கள் காலை 11 மணியளவில் ஜாம்நகரில் இருந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்து மீட்புப் பணியைத் தொடங்கினோம். அந்த சிறுமி சுமார் 20 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டுள்ளார். அவரை மீட்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று சர்வையா தெரிவித்தார்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…