சூரிய கிரகணம் என்பது சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு இருக்கும். அப்போது சூரிய ஒளியை நிலவு மறைப்பதால் அதன் நிழல் பூமியில் தெரியும் இது தான் சூரிய கிரகணம் என்கிறோம். அதன்படி இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளது.
இது குறித்து கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறுகையில், சூரியனின் ஒரு பகுதியை மட்டும் நிலவு மறைப்பது பகுதி சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. நிலவு சூரியனை மத்தியில் மறைப்பதால் சூரியன் வளையம் போன்று தோன்றும். இது வளைய சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. வளைய சூரிய கிரகணம் என்பது சூரியனின் விளிம்பு மட்டும் தெரியுமாறு சூரியனின் 90% பகுதி முழுவதுமாக நிலவினால் மறைக்கப்படும் நிகழ்வாகும்.
இந்த சூரிய கிரகணம் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளைத் தவிர வேறு எங்கும் காண இயலாது. இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இன்று மதியம் ஒன்று 1:42 மணிக்கு தொடங்கி மாலை 6:41 மணி வரை நிகழ உள்ளது. இதனை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. சூரியக் கண்ணாடி வாயிலாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சூரிய கிரகணமானது,கிரீன்லாந்து, ரஷ்யா போன்ற இடங்களில் இந்த வளைய சூரிய கிரகணம் தெரியும்.அதேநேரம், வடக்கு அலாஸ்கா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பகுதி சூரிய கிரகணம் தெரியும்.
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…