கேரளா மாநிலத்தை சார்ந்த லினோ அபெல்(30) இவர் கத்தார் நாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவரது தந்தை கட்டிலிருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தனது தந்தையை பார்ப்பதற்காக லினோ அபெல் கடந்த 8-ம் தேதி அவசரமாக கேரளாவிற்கு திரும்பினார்.
இந்நிலையில் கொரோனா காரணமாக இந்தியா முழுதும் அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் பரிசோதனை செய்து வருகின்றனர். இதையெடுத்து லினோ அபெல் விமான நிலையம் வந்து இறங்கியவுடன் லேசான இருமல் இருந்ததால் தானாகவே சென்று மருத்துவர்களிடம் அணுகி இருமல் இருப்பதாக கூறினார்.
இதையடுத்து கோட்டயம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தனி படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று லினோ அபெல் தந்தை உடல்நலம் மோசமாக நிலையில் கடந்த 9-ம் தேதி உயிரிழந்தார்.
ஒரே மருத்துவமனையில் இருந்தாலும் லினோ அபெல் கொரோனா அறிகுறியால் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் தனது தந்தை உடலை பார்க்க அனுமதி கொடுக்கவில்லை. இதையடுத்து மருத்துவமனையில் தந்தையின் உடல் ஆம்புலன்ஸில் செல்வதே ஜன்னல் வழியாக பார்த்து கண்ணீர் வடித்தார்.
பின்னர் மொபைலில் வீடியோ கால் மூலமாக தனது தந்தையின் இறுதிச் சடங்கை பார்த்து துடித்தார். இதையடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்ட லினோ அபெல், விமான நிலையத்தில் தானாக முன்வந்து மருத்துவரை அணுகினேன் அதுவே நான் மட்டும் மருத்துவரை அணுகாமல் இருந்திருந்தால் எனது தந்தை ஒரு முறையாவது பார்த்திருப்பேன் எனக் கூறினார்.
ஆனால் அவ்வாறு நான் செய்யவில்லை. காரணம் கொரோனா வைரஸ் என்னைத் தாக்கி இருந்தால் மற்றவர்களுக்கும் பரவிவிடும் என்ற காரணத்தால் தான் நான் மருத்துமனையில் சேர்ந்தேன். எனவே வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தயங்காமல் மருத்துவரை அணுகி உடலை பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…