டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த சிறப்பு காவல் ஆணையராக ஸ்ரீவஸ்தா நியமனம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் டெல்லி காவல் ஆணையராக ஸ்ரீவஸ்தாவை நியமனம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர செய்தனர். இந்த கலசவரத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் கலவரம் ஏற்பட்டபோது, உளவுத்துறை தகவலை பெற்று காவல்துறை முன்கூட்டியே செயல்படவில்லை என்ற புகார் எழுந்தது. பலர் உதவிகேட்டு போராடிய நிலையில் உரிய நேரத்தில் காவல்துறை உதவி அவர்களுக்கு கிடைக்கவில்லை என அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த நிலையில் டெல்லியின் புதிய காவல் ஆணையராக ஸ்ரீவத்சவா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…