ஏற்ற இறக்கத்துடன் இருந்த பங்குச்சந்தை சரிவுடன் முடிவு.!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன. இதனால், மத்திய மாநில அரசுகள் நிதி சலுகைகளை அளித்து வருகின்றன. இதன் காரணமாக நேற்று இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தது. ரிசர்வ் வங்கி ஆளுநர் வட்டி குறைப்பு மற்றும் கடன் தவணை அவகாசம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பின்னர் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடிக்கும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக வர்த்தகம் சரிவடைந்தது.
வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது. வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 131.18 புள்ளிகள் சரிந்து 29815.59 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டு எண் நிப்டி 18.80 புள்ளிகள் சரிந்து, 8,660 புள்ளிகளில் முடிந்தது. மேலும் மும்பை பங்குச்சந்தையில் பங்குகள் சரிவடைந்த நிறுவனங்களில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025