Categories: இந்தியா

பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 66,738 புள்ளிகளாக வர்த்தகம்..!

Published by
செந்தில்குமார்

இன்றைய வர்த்தக நாளில் 66,629 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ், 53.74 புள்ளிகள் உயர்ந்து 66,738 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 15.30 புள்ளிகள் உயர்ந்து 19,760 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 66,684 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,745 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. முந்தைய வாரங்களில் சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத் தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.

மஹிந்திரா & மஹிந்திரா, லார்சன் & டூப்ரோ, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. கோடக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Published by
செந்தில்குமார்

Recent Posts

கடலூர் ரயில் விபத்து : அக்கா, தம்பி உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…

44 minutes ago

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

1 hour ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…

3 hours ago

கடலூர் விபத்து : ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…

3 hours ago

நாளை முழுவதும் ஆட்டோ,பேருந்துகள் ஓடாது ஸ்ட்ரைக்! என்ன காரணம்?

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…

3 hours ago

சென்னையில் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு! ஆவணங்களை ரெடியாக வைத்திருக்க அறிவுறுத்தல்!

சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…

4 hours ago