Telugana Dog Attack [file image]
தெலுங்கானா : சமீபத்தில் அதிகமாக தெருநாய்கள் தாக்கிய செய்திகள் கேட்பதோடு வீடியோ கட்சிகளும் வெளியாகி நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. அதே போல ஒரு சம்பவம் தற்போது ஹைதராபாத்தில் உள்ள சங்கரெட்டியில் இருக்கும் ஸ்ரீநகர் காலனியில் எனும் இடத்தில் ஒரு சிறுவனை 6 தெரு நாய்கள் சுற்றி வளைத்து தாக்கி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது சம்மந்தமான காட்சிகள் அருகில் இருந்த வீட்டின் கேமராவில் பதிவாகி உள்ளது. அது வீடியோவாக தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில், “அச்சிறுவனை 6 தெருநாய்கள் சுற்றி வளைத்து தாக்கும், நீண்ட நொடிகளுக்கு பிறகு வீட்டில் இருந்து வெளிய வந்தவரை கண்டவுடன் அந்த தாக்குதலை நிறுத்தி விட்டு அந்த நாய்கள் அங்கிருந்து ஓடிவிடும்”. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இதனால் காயம் ஏற்பட்ட அந்த சிறுவன், அரசு மருத்துவாமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தெலுங்கானா மாநிலத்தில் சிறு குழந்தைகள் மீது தெருநாய்கள் தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகவே இருந்து வருவதை தெலுங்கானா உயர்நீதிமன்றம் தீவிரமாகக் கண்டித்ததுள்ளது.
மேலும், தெருநாய்களின் தொல்லையால் சிறுவர்கள் உயிரிழப்பது குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்ததுடன், இந்த பிரச்னைக்கு தீர்வு காண தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், இது போன்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும் எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நகராட்சி, வருவாய்த்துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…