உ.பி-யில் தொடரும் அவலம்..! இரண்டு சிறுவர்களை சிறுநீரை குடிக்க வைத்த கொடூரம்..!

இந்தியாவில் சிறுவர் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு சிறுவர்களுக்கு நடந்துள்ள கொடூர சம்பவம் அந்த மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டத்தில் சமூக விரோதிகள் சிலர் கோழிப்பண்ணையில் கோழி திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு, இரண்டு சிறுவர்களை பிடித்து அவர்களை கட்டாயப்படுத்தி சிறுநீரை குடிக்க வைத்துள்ளனர். அது மட்டும் அல்லாமல், அந்த இரண்டு சிறுவர்களின் ஆணுறுப்பிலும் பச்சை மிளகாயை தேய்த்துள்ளனர். வலி தாங்க இயலாமல் கதறிய இரண்டு சிறுவர்களுக்கும் மஞ்சள் நிற மருந்து நிரம்பிய ஊசியை செலுத்தியுள்ளனர். அவர்கள் செலுத்திய ஊசி பெட்ரோல் நிரப்பப்பட்ட ஊசி என கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெளியாகி உள்ள மற்ற வீடியோவில் சிறுவர்கள் தலைக்குப்புற படிக்க வைத்து அவர்களது கரங்கள் இரண்டும் முதுகுக்கு பின்னால் கட்டி போடப்பட்ட நிலையில், அவர்களது காற்சட்டையை கழட்டி அவர்களின் ஆசன வாயில் பச்சை மிளகாய் தேய்ப்பது பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ நேற்று முன் தினம் வெளியான நிலையில், இது தொடர்பாக சித்தர் மாவட்டத்தில் உள்ள சிக்கன் கடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், இரண்டு சிறுவர்களுக்கும் எதிராக செய்யப்பட்டுள்ள இந்த செயல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, ஆறு பேரை கைது செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.