சர்க்கரை ஆலைகள் அனைத்தும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதில் ஈடுபட வேண்டும் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதன் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். கொரோனாவால் உயிரிழப்பவர்கள் ஒருபுறமிருக்க, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற முடியாமலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது.
எனவே ஆக்சிஜன் தேவையை நிறைவு செய்வதற்காக பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அது போல மராட்டிய மாநிலத்திலுள்ள உஸ்மானாபாத் மாவட்டத்திலுள்ள தராசிவ் சர்க்கரை கூட்டுறவு ஆலை ஆக்சிஜன் ஆலையாக மாற்றி தினசரி 96 சதவீத தூய்மையுடன் 6 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறதாம். இந்த திட்டத்தை நேற்று முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்துள்ளார்.
அதன் பின் பேசிய முதல்வர் அவர்கள், மராட்டிய மாநிலத்தில் ஆக்சிஜன் உற்பத்தி திறன் ஒரு நாளைக்கு 1200 மெட்ரிக் டன் இருந்தாலும், ஆக்சிஜன் தேவை ஒரு நாளைக்கு ஆயிரத்து 1, 700 மெட்ரிக் டன் இருக்கிறது. எனவே தினமும் 3 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்தால் தான் நாம் தன்னிறைவு பெற முடியும் எனவும், மாநகராட்சிகள் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க முயற்சி செய்கின்றன, அதுபோல சர்க்கரை கூட்டுறவு ஆலைகலும் இதை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…