Categories: இந்தியா

பதஞ்சலி மருந்துகள்.. பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்.!

Published by
மணிகண்டன்

Baba Ramdev : பதஞ்சலி மருந்துகள் குறித்து பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

பாபா ராமதேவின் பதஞ்சலி நிறுவனமானது கொரோனா காலத்தில், தங்கள் தரப்பு மருந்துகளை அலோபதி மருந்துகளுடன் ஒப்பிட்டு விளம்பரம் செய்து இருந்தது. அதற்கு அறிவியல்பூர்வ ஆதாரம் இல்லை என கூறி நீதிமன்றம் விளம்பரங்களுக்கு தடை செய்து இருந்தது.

நீதிமன்ற தடையையும் மீறி பதஞ்சலி நிறுவனம் தாங்கள் தயாரித்த ஆயுர்வேத மருந்துகளுக்கு விளம்பரங்களை பதிவு செய்து வந்தனர். தடையை மீறி பதஞ்சலி நிறுவனம் விளம்பரங்களை பதிவு செய்ததால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை,  உச்சநீதிமன்ற நீதிபதி ஹிமா கோஹ்லி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

முன்னர் நடைபெற்ற விசாரணையில், பதஞ்சலி நிறுவன வழக்கு தொடர்பாக பாபா ராம்தேவ், பதஞ்சலி நிறுவனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.அதன்படி, இன்று நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர். அப்போது பாபா ராம்தேவ் நீதிபதி முன்னர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

அதனை ஏற்காத நீதிபதிகள், இந்த மன்னிப்பை நீங்கள் ஏன் எழுத்துபூர்வமாக கேட்கவில்லை.? நீங்கள் செய்த விளம்பரங்களுக்கு அறிவியல்ப்பூர்வ முகாந்திரம் இருக்கிறதா.?  விளம்பரம் செய்ய நீதிமன்றம் தடை விதித்தும், நீங்கள் அதனை திரும்ப செய்ததற்காக நாங்கள் ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது.? என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வழக்கு மீதான விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

13 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

15 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

19 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

20 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

22 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

22 hours ago